Home Jaffna News வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று

வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று

யாழ்.வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இன்று 39 பேர் உட்பட இரண்டு நாட்களில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் இன்று பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 32 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார்.

அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமன்னாரில் ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!
Next articleயாழ்.ஊர்காவற்றுறை தம்பாட்டியில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி