விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் சாந்தனு, பீஸ்ட் படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பி உள்ள நிலையில், நடிகர் ஆரி பேசியதை ஷேர் செய்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக ப்ளூ சட்டை மாறனுக்கும் நடிகர் சாந்தனுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்யும் போது எங்கே போனீர்கள் என அஜித் ரசிகர்கள் சாந்தனுவை விளாசி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் மாணவனாக நடித்து அசத்தி இருந்தார் நடிகர் சாந்தனு. மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிலும், மாஸ்டர் படத்தில் நடித்தது பற்றி பல விஷயங்களை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு எதிராக கிளம்பி உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார் நடிகர் சாந்தனு.
ப்ளூ சட்டை மாறனை திட்டும் விதமாக நடிகர் ஆரி பேசிய வீடியோவை சாந்தனு ஷேர் செய்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் பிட்டுப்படத்தில் நடித்த நடிகர் எல்லாம் பேசக் கூடாது என்பது போல ட்வீட் போட்டு புதிய சண்டையை ஆரம்பித்து வைத்தார்.
சாந்தனுவின் கமெண்ட்டுக்கு கீழ் சில அஜித் ரசிகர்கள் வலிமை படம் வந்தப்போ வாயே திறக்கவில்லையே.. அப்போ என்ன கோமாவிலா இருந்தீங்க என கண்டபடி திட்டி சாந்தனுவுக்கு எதிரான கமெண்ட்டுகளை போட்டு அவரை வம்பிழுக்க அதற்கு மறுப்பும் தெரிவிக்கும் விதமாக நடிகர் சாந்தனுவும் பதில் அளித்துள்ளார்.
பீஸ்ட் படத்துக்கு ஆதரவாக நடிகர் சாந்தனு குரல் கொடுத்துள்ள நிலையில், அஜித் படத்தை ட்ரோல் செய்யும் போது எங்கே போனீர்கள் என அஜித் ரசிகர்கள் சரமாரியாக நடிகர் சாந்தனுவிடம் கேள்விகளை எழுப்பி அவரை விளாசி வருகின்றனர். நடிகர் அஜித்தை பாடி ஷேமிங் பண்ணும் போதும் அதற்கு எதிராக பேசியுள்ளேன் என சாந்தனு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதற்கு இடையே நடிகர் சாந்தனுவின் அப்பா பாக்கியராஜ் பேசிய அரசியல் ரீதியான கருத்துக்களுக்கு எதிராகவும் நடிகர் சாந்தனுவை ட்ரோல் செய்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அஜித் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். “இந்தி தெரியாது போடா” டிசர்ட்டை சாந்தனு மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த போட்டோக்களையும் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.