Home Local news மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனைக்காக எடுத்துவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிநடத்தலில் சம்பவதினமான நேற்று மாலை

குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு வலம் புரிச் சங்கு வாங்குவது போல நடித்து சங்கை கிரான்பகுதிக்கு எடுத்துவருமாறு தெரிவித்ததையடுத்து

மட்டக்களப்பில்  வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

குறித்த நபர் வலம் புரி சங்கை விற்பனைக்காக எடுத்துகொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரிக்ரொக் காதல் -நெதர்லாந்துப் பெண் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு
Next articleமட்டக்களப்பு வாகரையில் வீடொன்றிலிருந்து தீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு