Home Tamil News வரலாற்றில் முதல் தடவையாக நேர் கோட்டில் சந்திக்கும் ரணில், மகிந்த

வரலாற்றில் முதல் தடவையாக நேர் கோட்டில் சந்திக்கும் ரணில், மகிந்த

வரலாற்றில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் பிரதமர் மகிந்தவும் நாடாளுமன்றில் ஆளும் கட்சி முன்வரிசையில் அமர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் கட்சி வரிசையில் ரணில்,மகிந்த இதுவரையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துக்கொள்வார்.

முன்னாள் பிரதமரும், முன்னாள் அரச தலைவமான மகிந்த ராஜபக்சவிற்கு ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் கட்சி வரிசையில் ரணில்,மகிந்த

எவ்வாறெனினும் மகிந்த இன்று நாடாளுமன்றிற்கு பிரசன்னமாவாரா என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகாலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் இரு முக்கியஸ்தர்கள் கைது!
Next articleசொகுசு கார் விபத்தில் சீன நாட்டவர் இருவருக்கு நேர்ந்த நிலை!