சபரி என்ற பன்மொழிப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார் என்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளது. அனில்காட்ஸ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சபரி காதல் மற்றும் குற்றங்கள் கலந்த ஒரு உளவியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்செட்டி, மைம் கோபி ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு-மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, நானி சமிடிசெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மஹா மூவீஸ் மூலம் மகேந்திர நாத் கோண்ட்லாவால் சபரி தயாரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் மகரிஷி கோண்ட்லா படத்தை வழங்குகிறார்.
இந்தத் திட்டம் தவிர, வரலக்ஷ்மியின் வரிசையில் NBK 107, யசோதா மற்றும் அனுமான் போன்ற படங்கள் உள்ளன.