Home Jaffna News வட்டுக்கோட்டையில் வீடொன்றில் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் டெங்கு காய்ச்சலினால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
Next articleஇன்றைய ராசிபலன் – 28/05/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்