வடமாகாணத்தில் நேற்று 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 847 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர் என 116 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தல், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர் என, 3 பேர் பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தில், மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டார்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் என, 23 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டார்