லுணுகல பிரதேச செயலகத்தின் ஐந்து ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் நடத்திய பிசிஆர் சோதனை களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து லுணுகல பிரதேச செயலக அதிகாரிகள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லுணுகல பிரதேசத்தில் இந்நாட்களில் பெரும் எண்ணிக்கையான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 267 கொவிட் தொற்றாளர்கள் இப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.