லிந்துலை பகுதியில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை உயிரிழந்துள்ளார்.
பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன லிந்துலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
படப்பிடிப்புக்காக நுவரெலியா சென்றிருந்த நிலையில் மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த வேளை அவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் லிந்துல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.