Home Local news லிட்ரோ நிறுவனத்திடம் இருந்து மகிழ்ச்சிகர செய்தி!

லிட்ரோ நிறுவனத்திடம் இருந்து மகிழ்ச்சிகர செய்தி!

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கப்பல் நாளை மறுநாள் நாட்டை வந்தடைய உள்ளது.

இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுறா வளர்ப்பில் போட்டியாம்: யாழில் 40ற்கும் மேற்பட்ட புறாக்களோடு கூட்டை பெற்றோல் ஊற்றி எரித்த காடையர்கள்!
Next articleஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் கைது