Home Local news றம்புக்கனை சம்பவம்:மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

றம்புக்கனை சம்பவம்:மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், றம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் றம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

றம்புக்கனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், சாட்சியாளர்களிடம் சுயாதீன விசாரணைகளை நடத்தவும் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே றம்புக்கனை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் சிலர் காயமடைந்தமை சம்பவந்தமான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழ் நகரில் சிஐடி என கூறி காஸ் சிலிண்டரை வழிப்பறி செய்த 20 வயது திருடன் சிக்கினான்!
READ MORE >>>  ஏ 9 வீதியில் பாரிய விபத்து; ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்.
Previous articleசூரியை நம்ப வைத்து கழுத்தை அறுத்தாரா வெற்றிமாறன் !! பீதியில் ரசிகர்கள்
Next articleவெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு, STR இன் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!