Home CRIME NEWS யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய ரௌடிக்குழு தலைவன் மடக்கிப் பிடிப்பு; தந்தையும் கைது

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய ரௌடிக்குழு தலைவன் மடக்கிப் பிடிப்பு; தந்தையும் கைது

யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடிக்குழு தலைவனான தனுரொக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய், லோட்டஸ் வீதியிலுள்ள வீட்டில் இன்று மாலை அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் வீட்டில் நடத்திய சோதனையின் அடிப்படையில் தந்தையும் கைதானார்.

பத்மராஜா தனுசன் (30) என்பவர் தனு ரொக் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பிரபல ரௌடிக்குழு தலைவனாக இயங்கி வந்தார். ஆவா குழுவில் செயற்பட்ட பின்னர், அதிலிருந்து பிரிந்து தனுரொக் என்ற ரௌடிக்குழுவின் தலைவராக செயற்பட்டார்.

ஆவா குழுவும், தனு ரொக் குழுவும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்தனர்.

தனு ரொக்கை பொலிசார் தேடி வந்த போது, அவர் ரௌடிக்குழுவில் செயற்படுவதில்லை, கொழும்பில் படித்து வருகிறார் என பெற்றோர், பொலிசாருக்கு கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் தந்தை மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய ரௌடி ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடிக்குழு தலைவனான தனுரொக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனு ரொக்கே தன்னை ஏற்றி வந்ததாக தெரிவித்தார்.

தனு ரொக் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வாள் வெட்டில் ஈடுபடுவதை உறுதி செய்த பொலிசார், இன்று மடக்கிப் பிடித்தனர்.

இன்று தனது வீட்டில் தனு ரொக் தங்கியிருந்த போது, மானிப்பாய் பொலிசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்ட போது வாள் மீட்கப்பட்டது. இதனடிப்படையில், தனு ரொக்கின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுல்லைத்தீவில் சமையல் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்கள் கூட்டம்
Next articleமரண அறிவித்தல் – Mrs Philomina Bastian