ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு

ரூ. 620 கோடி (ரூ. 6,200 மில்லியன்) பெறுமதியான போதைப்பொருட்களுடன், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, இலங்கை கரையோ பாதுகாப்பு திணைக்களம், அரச புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து நேற்றையதினம் (12) மேற்கொண்ட குறித்த நடவடிக்கையில் இவ்வாறு போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காலி, தொடந்துவ கடற்பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொண்ட அவர்கள், இலங்கை படகொன்றில் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த, 300 கி.கி. ஹெரோயின் மற்றும் 25 கி.கி. ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இதன்போது இலங்கையின் பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றையும் குறித்த சம்பத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகு, ஒரு கெப் வாகனம், முச்சக்கர வண்டி ஒன்று ஆகியவற்றை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர், சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு ரூ. 620 கோடி பெறுமதியான 325 கி.கி. போதைப்பொருட்கள் மீட்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..