உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளாது.
உக்ரைனில் பிப்ரவரி 24ஆம் திகதி அன்று ஊடுருவலைத் ரஷ்யா தொடங்கியது. மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
அழகிய நாடாக அறியப்படும் உக்ரைன் ரஷ்யாவின் போர் தாக்குதலை தொடர்ந்து உருக்குலைந்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டொலர்கள் ஆகும்,
அதாவது பல லட்சம் கோடிக்கு இது சமம். இந்த தகவலை கீவ் பொருளாதார கல்லூரி கணித்து கூறி உள்ளது.