Home Jaffna News ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ சிப்பாய் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ சிப்பாய் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்..

ரயிலில் துாங்கியதால் இறங்கவேண்டிய இடத்தில் இறங்காமல் மற்றொரு புகைரத நிலையத்தில் இறங்க முற்பட்டபோது துாக்க கலக்கத்தில் தாடுமாறி விழுந்த இராணுவ சிப்பாய் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்துள்ளார். குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.

யாழ்ப்பாண நிலையத்தில் இறங்க வேண்டியவர் , தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார்.

திடீரென தூக்கத்திலிருந்து எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து, தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஊசி மூலம் ஹெரோயின் எடுத்துக் கொண்ட பூசகர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்
Next articleயாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு; ஐவர் சிக்கினர் – துர்நடத்தையினால் சிறுமிகளும் விளக்கமறியலில்