Home Local news ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்ற மூவர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்

ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்ற மூவர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்

ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து நேற்று முன்தினம் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று மீண்டும் வவுனியாவுக்கு திரும்பும் வழியில், றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்ற மூவர் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்

இதன்போது 7 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

காணாமல் போன மூவரில் இருவர் பெண்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், ஏனைய 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article300kg ஹெரோயின், 25kg ஐஸ் போதைப்பொருளுடன் தெற்கு கடலில் சிக்கிய படகு
Next articleஇன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்