ரம்புக்கன போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 08 பொலிஸார் உட்பட காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் எமது jaffna7 செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது ஒருவர் மரணித்துள்ளதுடன் 24இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 17 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்
இந்த சம்பவம், ரம்புக்-கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ரம்புக்கனை தொடரூந்து கடவையை சுமார் 15 மணித்தியாலங்களாக போக்குவரத்துக்காக தடை செய்தமையை அடுத்தே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதேவேளை, ரம்புக்க-னையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவத்தில் பொலிஸார் பொதுமக்கள் மீது ஏகே 47 பிரயோகித்திருந்தமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவத்தில் காயமடைந்த 7 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் போராட்டகாரகள் மீது ஏகே 47 பிரயோகித்திருந்தமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அது குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி – கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் ரம்புக்கனை – கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவ்வாறு துப்பாக்கி பியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவத்தல் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: பொலிசாரின் விளக்கம்!
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை பொலிசார் உறுதி செய்துள்ளர்.
முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டதுடன், எரிபொருள் பவுசருக்கு எரியூட்ட முற்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றார்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 10பேர் படுகாயம்