ரம்புக்கனை சம்பவம்: தொடர்புடைய சகல காவல்துறையினரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு காவல்துறைமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..