Home Jaffna News யுவதியை பின் தொடர்ந்த கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

யுவதியை பின் தொடர்ந்த கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யுவதியை பின் தொடர்ந்த கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையகச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.

அவர்களிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு வீடொன்றுக்குள் குறித்த பெண் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபெண்களை ஏமாற்றும் மன்மதன்களும் நம்பி ஏமாறும் பெண்களும்
Next articleஒன்றாக கூடி கும்மியடித்த தாதியர்களிற்கு கொரோனா