Home Jaffna News யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் ‘ஜன சுவய’ கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபா  (2,320,000.00)  பெறுமதியான  அத்தியாவசிய நவீன இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் (டயாலிசிஸ் இயந்திரம் ) யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பவனதராஜாவிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கையளித்தார்.

யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் வைத்தியர் ராஜித சேனாரத்ன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர், யாழ் மாவட்ட அமைப்பாளர் திருமதி உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர் கையளிப்பு

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட வேண்டும்; அமைச்சர் சிறிபால டி சில்வா
Next articleஹிஷாலினியின் அறையில் சிக்கிய புடவைத்துண்டு