Home Jaffna News யாழ்.வடமராட்சி கிழக்கில் கொன்று புதைக்கப்பட்ட நபர்..! மனைவியும், பிறிதொரு நபரும் இணைந்தே கொன்றதாக தகவல்

யாழ்.வடமராட்சி கிழக்கில் கொன்று புதைக்கப்பட்ட நபர்..! மனைவியும், பிறிதொரு நபரும் இணைந்தே கொன்றதாக தகவல்

யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியே கணவனை கொலை செய்து புதைத்தமை விசாரணைகளில் தொியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் கூறியுள்ளனர்.

வெற்றிலைக்கேணி – முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் இன்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமையினை கண்டறிந்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 11/05/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleயாழ்.திருநெல்வேலியில் உள்ள வைத்தியசாலையை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கைவரிசை