யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் சத்திரசிகிச்சை விடுதியில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலுமொரு விடுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 14ஆம் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
அதே விடுதியில் பணியாற்றிய தென்னிலங்கையை சேர்ந்த தாதியொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
தமது விடுதியில் இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து,
அங்கு சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகள் இரவோடு இரவாக வைத்தியசாலையில் பதிவு செய்து விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் வெளிமாவட்ட ஊளியர்கள் கொரோனா பரிசோதனைகள் இன்றி தாராளமாக வலம் வரும் செயற்பாட்டினால்
இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியும் தொடரும் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.