யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிரபல பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவர் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒரு சில வைத்திய நிபுணர்களின் தூண்டுதலாலும் தற்போதய பணிப்பாளரான பவானந்தராசாவின் திருவிளையாடல் களினாலும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தன்னிச்சையான இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை தொடர்பாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவர் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
Jaffna News | Today Jaffna Tamil News | newjaffna | யாழ் செய்திகள்