யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் மதுபோதையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதன்போது மாணவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.