யாழ்.நெடுந்தீவு கடலில் கடற்படையினர் அதிரடி..! பொதியை வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது , அவற்றில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..