முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்.நாவற்குழி பகுதியை சேர்ந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கள்ளப்பாடு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வீடொன்றிலிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில்
முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.