யாழ்.நகரில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
குறித்த விபத்து இன்று காலை சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் தாயாருடன் பயணித்த நிலையில், பின்னால் வந்த பாரவூர்தி மோட்டார் சைக்கிள் மீது மோதிய நிலையில் துாக்கி வீசப்பட்டுள்ளான்.
பின்னர் கீழே விழுந்த சிறுவனை பாரவூர்தி மீண்டும் மோதி நசித்துள்ளது. இதனால் சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் தாவடியை சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாரவூர்தியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.