Home Jaffna News யாழ்.தொல்புரத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து திருட்டு! வவுனியாவை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது

யாழ்.தொல்புரத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து திருட்டு! வவுனியாவை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது

யாழ்.தொல்புரம் – வழக்கம்பரை அம்மன் ஆலயத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்து தொலைபேசியை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தாயாருடன் கோவிலுக்கு வந்திருந்த பெண் ஒருவர் கோவிலின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இந்நிலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்த இரு தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளது. பின்னர் கோவிலில் இருந்து வெளியேவந்த பெண் மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது திருடப்பட்ட இரு தொலைபேசிகளும் மீட்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் வவனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான இளைஞன் இரண்டு தடவைகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர் என்பதுடன் மூன்றாவது தடவை இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்று வந்தநிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் சிறையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய மற்றொரு தந்தையும் காலமானார்
READ MORE >>>  கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு வேண்டுகோள்!
Previous articleகோயிலுக்கு சென்று திரும்பிய பெண் யானையின் தாக்குதலில் பலி
Next articleநோர்வூட் தங்க கொள்ளை – நடந்தது என்ன?