Home Accident News யாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலையை அண்மித்த பகுதியில் கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே பலி, 3...

யாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலையை அண்மித்த பகுதியில் கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் படுகாயம்

யாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டுள்ளது.

குறித்த விபத்தின்போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து , பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை விபத்து தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Img 6625 Img 6619 Img 6618 Static Image Cdn Static Image Cdn 1

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 18.05.2022
Next articleகொத்து கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட எம்மவர்கள்! – நிலத்துக்காய் போராடியவர்கள் நிலத்தினுள் மடிந்து இன்றுடன் 13 ஆண்டு