Home Jaffna News யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்

யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும்,

77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில்

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article2கோடி பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தியை, கடத்த முயன்ற 6 பேர் கைது
Next articleயாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 16 முன்னாள் போராளிகளே விடுதலை, பெயர் விபரம் உள்ளே