Home Jaffna News யாழ்.சிறுப்பிட்டி பாடசாலை அதிபருக்கு கொரோனா! அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டாராம்

யாழ்.சிறுப்பிட்டி பாடசாலை அதிபருக்கு கொரோனா! அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டாராம்

யாழ்.சிறுப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாடசாலை அதிபருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 கணக்கானோர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த அதிபர் கடந்த 14.07.2021ம் திகதி யாழ்.கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதில் 50பேர் பங்குபற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைவிட குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடாத்தியுள்ளார்.மட்டுமன்றி உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

இவருடன் தொடர்பில் இருந்த அல்லது இவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை.

குறித்த அதிபரின் பாடசாலையில் முதல்வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன் இம்மாதம் 9ஆம் தேதி குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசியும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ். மாவட்டத்தில் கோவிட்டால் ஒரே நாளில் ஐவர் உயிரிழப்பு
Next article10 வருடமாக நடந்த பாதகம்: பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து பாதுகாப்பு கோரி பொலிசில் தஞ்சமடைந்த யுவதி!