யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக அலுவலர்கள் 4 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திட்டமிடல் பிரிவு இழுத்து முடப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் பணிப்பாளருக்கு நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வெளிக்கள அலுவலர் ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திட்டமிடல் பிரிவில் நேற்றும் 2 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் திட்டமிடல் பிரிவில் நேற்று கடமைக்கு வந்திருந்த 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த அடிப்படையில் பிரதேச செயலர் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
பிரதேச செயலகத்தில் தினமும் 50 வீதமான அலுவலர்கள் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில்
இன்று தொடக்கம் 25 வீதமான அலுவலர்களை மட்டும் கடமைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த மாதமும் சாவகச்சோி பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் சுமார் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன்,
திட்டமிடல் பிரிவு கடந்த மாதமும் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.