இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இன்று இரவு (23-05-2022) யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோல் பெறுவதற்கு காத்திருந்த போது பெற்றோல் வழங்குவதை இடை நிறுத்தியதால் குழப்பம் நிலை தோன்றியது.
இதனைத் தொடர்ந்து எரிபொருள் நிலைய நடத்துனருக்கும் மக்களுக்குமிடையில் சரமாரியான வாய்தர்க்கம் எற்பட்டதுடன் கடமையிலிருந்த கோப்பாய் பொலிஸார் மக்களை சமரசப் படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மக்கள் இரவு 9.00 மணியிலிருந்து, 10.00 மணி வரை இடைவிடாது போராடியதால் மக்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் பெற்றோல் வழங்க ஏரிபொருள் நிலைய நடத்துனர் இனங்கியதை அடுத்து மீண்டும் மக்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.