யாழ்.ஊர்காவற்றுறை – தம்பாட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
தம்பாட்டி நண்டு பதனிடும் தொழிற்சாலையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தம்பாட்டிக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் 60 பேரிடம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.