யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம்

யாழ்ப்பாண நகர் மத்தியில் அமைந்துள்ள Aariyakulam ஆரிய குளம் , யாழ்.மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு , குளத்தினை சூழவுள்ள பகுதிகள் அழகாக்கப்பட்டு ” ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்” என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்டது.

அதனையடுத்து அப்பகுதிக்கு பெருமளவான மக்கள் தமது பொழுதை கழிப்பதற்காக அதிகளவில் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், ஆரிய குளத்திற்கு வருகை தரும் மக்களை மகிழ்விப்பதற்காக படகு சவாரி முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது. யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மேலும், மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன். உள்ளிட்ட மாநகர உறுப்பினர்கள், ஊர்மக்கள் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம் யாழ். ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகுசவாரி ஆரம்பம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..