Home Economy யாழ்ப்பாணம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரித்தது எரிபொருள் கொடுப்பனவு

யாழ்ப்பாணம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரித்தது எரிபொருள் கொடுப்பனவு

யாழ்ப்பாணம் உட்பட தூரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து அவர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு இரண்டு இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு காலத்துக்குக் காலம் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத நிலை காணப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்போது எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரையான எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இரண்டு காதலர்கள்!! நேரில் அழைத்து பரீட்சை வைத்து திருமணம் முடித்த யாழ் யுவதி!
READ MORE >>>  உளநல ஆரோக்கிய தினத்தில் கல்லடி பாலத்தின் வாவியை நீந்திக் கடந்த இளைஞன்
Previous articleபிரித்தானியாவில் சிறுமி கொடூரமாக படுகொலை – இளைஞர் ஒருவர் கைது
Next articleடீசல் இல்லாததால் திரும்பி வந்த நோயாளர்கள்