Home Jaffna News யாழ்ப்பாணத்தில் 10 பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் 10 பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வவுனியா பொது வைத்தியசாலை

12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி இருவரும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவற்றில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபேஸ்புக் தொடர்பு ! 13 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்
Next articleஇராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்