Home Jaffna News யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் சாவு; இதுவரை 176 பேர் காவு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் சாவு; இதுவரை 176 பேர் காவு

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅரசாங்கத்திற்கு நாட்டில் பாரிய எதிர்ப்பு; சிவனேசதுரை சந்திரகாந்தன்.
Next articleமதுரை சன்னிதானம் அருணகிரிநாதர் காலமானார்