Home Jaffna News யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் கனகரட்னம் வீதி, அரியாலையை சேர்ந்த பரமேஸ்வரன் லக்சன் (வயது-25) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

அரியாலை காந்திநிலையம் பூமகள் வீதியை பிறப்பிடமாகவும் இருப்பிடமாகக் கொண்ட பரமேஸ்வரன் சுலக்சன் 04/03/22வெள்ளிக்கிழமை இன்று அகால மரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05/03/22சனிக்கிழமை அவர்களின் இல்லத்தில் இறுதிஅஞ்சலி இடம்பெற்று பிற்பகல் 4.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் இடம்பெறும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து ஆத்மா சார்ந்தியடைய இறைவன் பிராதித்து கொள்கிறோம்.

அரியாலை ஓய்வு நிலை உத்தியோகத்தர் பொலிஸ் பரமுசெல்வராஜா அவர்களின் இழையசகோதரியின் பேரனுமாவார்

யாழ்ப்பாணத்தில்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.பொன்னாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Next articleப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த அஜித் !! நீங்களே பாருங்க புரியும்