கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.