Home Jaffna News யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் நால்வர் சாவு; 44 பேர் தொற்றுடன் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் நால்வர் சாவு; 44 பேர் தொற்றுடன் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article15 வயது மகளுக்கு தந்தை கொடுத்த பரிசு
Next articleகோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழப்பு!