யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளை துணிகர திருட்டு

இன்று அதிகாலை 2 மணியளவில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்குள் இருவர் உள்நுழைந்து வீட்டில் உள்ளவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..