Home நாட்டு நடப்புக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து நடந்து செல்லும் வெளிநாட்டவர்

யாழ்ப்பாணத்திலிருந்து நடந்து செல்லும் வெளிநாட்டவர்

யாழ்ப்பாணத்திலிருந்து நடைபயணமாக மாத்தறை நோக்கி பயணிக்கும் நேபாளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஐ பஹதூர் என்பவர் நேற்று (04) காலை மீகஹகியுலாவை சென்றடைந்தார்.

இந்த நடைபயணத்தை இலங்கையில் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆசை தனக்குள் இருந்ததாக தெரிவித்தார்.

‘JAFNA TO MATHARA WALKIN’ என பெயரிடப்பட்ட அவரது நடைபயணம், ஏப்ரல் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்தது.

தற்போது 19 நாட்களாக நடந்து வருவதாகவும் பஹதூர் கூறினார்.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து, இந்தியாவிலுள்ள பெங்களூருக்கு கால்நடையாகவும், பெங்களூரிலிருந்து கொழும்புக்கு விமானம் மூலமாகவும், பின்னர் ரயில் மற்றும் பேருந்து மூலம் யாழ்ப்பாணம் சென்றதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறைக்கு நடந்து சென்று பல்வேறு மொழி பேசும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் குறித்து ஆய்வு செய்வதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  2 நாட்கள் வீட்டுக்கு போகாத இளைஞன்: எரிபொருள் வரிசையிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம்!
READ MORE >>>  “ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்”: கொழும்பிற்குள் நுழைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்
Previous articleநள்ளிரவு முதல் ரயில் சேவை வேலை நிறுத்தம்
Next articleநாளை வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்