Home Jaffna News யாழில் வீடுடைத்து 30 அங்கர் பால்மா பெட்டிகள் கொள்ளை!

யாழில் வீடுடைத்து 30 அங்கர் பால்மா பெட்டிகள் கொள்ளை!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (22) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்கத்தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா இந்துகல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த தருணத்தில் கொள்ளை கும்பல் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து வீட்டின் பிரதான முன்வாசல் கதவை கொத்தி உட்சென்று கொள்ளையிட்டுள்ளனர்.

ஒரு பவுண் தங்க நகை, முப்பது அங்கர் பால் மா பெட்டி, இருபதாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (23) வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமனைவியை மீட்டு தாருங்கள்:கணவன் முறைப்பாடு
Next articleஇன்றைய ராசிபலன் – 24/11/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..