Home Jaffna News யாழில் விபத்து ! பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை அதிபர்

யாழில் விபத்து ! பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை அதிபர்

யாழில் விபத்து! பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை அதிபர்

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது.

யாழில் விபத்து

இந்த சம்பவத்தில் முல்லைத்தீவு – முத்துஜயன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரான க.சத்தியசீலன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலை அதிபர் யாழ்.சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் தொியவருகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமதுபான விடுதி கொலை: சரணடைந்த சந்தேக நபர்
Next articleஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான உண்மைத் தகவல்!