Home CRIME NEWS யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றிரவு  ( 4/5) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 47 வயதுடைய இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதுடன், இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 05/04/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleகனடாவில் பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு – இரு தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது