Home Jaffna News யாழில் மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழில் மேலும் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உயர்வடைந்துள்ளது

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் கோவிட்-19 நோயினால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு
Next articleபஸ்ஸில் தூங்கிய பெண் சடலமாக மீட்பு