யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்றும் இருவர் உயிரிழந்தனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழை யைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், வல்வெட்டித் துறையைச் சேர்ந்த 80 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகளால் யாழ். மாவட்டத்தில் தொற்று மரணம் 132ஆக உயர்ந்துள்ளது.