யாழில் பரபரப்பு! சிறுவர் இல்லத்திலிருந்து வயதுக்கு வந்த 3 சிறுமிகள் மாயம்!!

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளையே காணவில்லை என்று கூறப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

பின்னிணைப்பு-

காணாமல் போன சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..