Home Jaffna News யாழில் நீர் வெறுப்பு நோயினால் 3 பிள்ளைகளின் தந்தை பலி

யாழில் நீர் வெறுப்பு நோயினால் 3 பிள்ளைகளின் தந்தை பலி

யாழ்ப்பாணம், கடற்கரை வீதியில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமையினால் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில், அது தொடர்பில் மருத்துவ சிகிச்சை பெறாததால் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதுடன்,2 மாதங்களுக்கு முன்பு பூனையும் நகங்களால் கீறியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருக்கு நேற்றிரவு திடீரென நடுக்கம் ஏற்பட்ட நிலையில்,பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleInstant Auto Insurance Quotes Are Available for Free – Here’s How
Next articleInstant Auto Insurance Quotes Are Available for Free – Here’s How